ஈரோடு : கொலையை நேரில் பார்த்த சாட்சிகளுக்கு கொலை மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு அருகே இளைஞர் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றவாளியின் உறவினர்கள் மீது  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

முனியப்பன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஹரிஷ் முன்விரோதம் காரணமாக அண்மையில் கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், ஹரிஷ் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளான கெளதம், அன்பரசன் இருவருக்கும் குற்றவாளியின் உறவினர்கள் 9 பேர், சாட்சி அளிக்க கூடாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக. காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து கிராம மக்கள் புகார் அளித்தனர். சாட்சி அளிக்கவுள்ள இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

varient
Night
Day