இளைஞர் வெட்டிக்கொலை - மர்மகும்பல் வெறிசெயல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமறாக்கி கிராமத்தை சேர்ந்த மனோஜ் பிரபு என்ற இளைஞர் சக நண்பர்களுடன் புதுப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு இளைஞர் மனோஜ் பிரபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு மீண்டும் காரில் ஏறி தப்பி சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்த இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட மனோஜ் பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

varient
Night
Day