இளைஞர் அஜித்குமாருக்கு காவலர்கள் கஞ்சா கொடுத்து தாக்குதல் - நேரில் பார்த்த மனோஜ்பாபு பரபரப்பு பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போகும் அளவிற்கு காவல்துறையினர் அடித்து சித்ரவதை செய்ததாக நேரில் பார்த்த உறவினர் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  அஜித்குமாரின் உறவினர் மனோஜ்பாபு, காவல்நிலையத்தில் அஜித்குமாருக்கு  கஞ்சா கொடுத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். இதுமட்டுமின்றி அஜித்தின் ஆடைக்குள் மிளகாய் பொடியை  கொட்டி அவரை துடிக்க துடிக்க காவல்துறையினர் அடித்ததாகவும்  மனோஜ்பாபு தெரிவித்தார். தண்ணீர் தண்ணீர் என கேட்டபோது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை அஜித்குமாரின் வாயில் ஊற்றி சித்ரவதை செய்ததாகவும் மனோஜ்பாபு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  

Night
Day