நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை விசாரணைக்கு வருமாறு தொந்தரவு செய்த போலீசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளூர் காலனியைச் சேர்ந்த சகாயராஜ் அதேபகுதியில் கேபிள் டிவி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் நிலையூரைச் சேர்ந்த குமரேசன் என்பவருக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், சகாயராஜ் தன்னுடைய நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சகாயராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணைக்காக, பெண் காவலர்களின்றி அதிகாலையில் சகாயராஜ் வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரது மனைவியை விசாரணைக்கு வருமாறு கதவை தட்டி தொந்தரவு செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Night
Day