பாமகவிலிருந்து எம்.எல்.ஏ அருளை நீக்குவதற்கு அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை - ராமதாஸ் பேட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்குவதற்கு அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை என சாடியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியில் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? என்பதை தானே முடிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், நகை திருட்டு புகாரில் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அஜித்குமார் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பாமகவில் இருந்து எம்.எல்.ஏ அருளை நீக்குவதற்கு அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், பாமகவில் பொறுப்பு வழங்கவும், நீக்கவும் தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்தார். மேலும், அன்புமணி குறித்தான கேள்விகளுக்கு தன்னிடம் எந்த பதிலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day