கோலமாவு மூட்டை சரிந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோலமாவு மூட்டை சரிந்து விழுந்ததில் வீட்டில் விளையாடிய கொண்டிருந்த சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரத்தில் வசிக்கும் சின்னப்பராஜ் என்பவர் கோலமாவு விற்பனை செய்து வருகிறார். விற்பனைக்கான கோலமாவு மூட்டைகளை சின்னப்பராஜ் வீட்டின் முன்பு அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் அவரது 3 வயது மகன் மேகராஜ் தனது அண்ணன் ரோஷனுடன் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கோலமாவு மூட்டைகள் சரிந்து விழுந்துள்ளது. இதில் மூட்டைக்கு அடியில் சிக்கி சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டநிலையில், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Night
Day