வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரஷ் ரிஜிஜு தெரிவித்ததையடுத்து, வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சகம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. வரும் 21 முதல் ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் விவகாரம், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day