இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - வழக்கறிஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெசன்ட் நகரில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். 

வில்லிவாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் பெசன்ட் நகர் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் அவ்வழியாக வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து இளம்பெண் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் கைதானவர் சாய் ஸ்ரீதரன் என்பதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாய் ஸ்ரீதரனை ஆகஸ்ட் 18 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

Night
Day