தேர்தல் ஆணையத்தின் முரண்பாடுகளை நீதிமன்றத்தில் முன் வைப்போம் - தேஜஸ்வி யாதவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனுக்கு அஞ்சலி செலுத்த பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து புறப்பட்ட தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு விளக்கமளிக்கப்படும் என்று கூறினார். அதே வேளை ஒரே குடும்பத்தை சேர்ந்த 50 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும் பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்தும் தேர்தல் ஆணையம் தங்களிடம் விளக்கம் கூற வேண்டும் என வலியுறுத்திய தேஜஸ்வியாதவ், தேர்தல் ஆணையத்தின் முரண்பாடுகளை நீதிமன்றத்தில் முன் வைப்போம் என்றும் கூறியுள்ளார்.

Night
Day