ஆளில்லா வீட்டில் 100 சவரன் கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கோயில் நகை உட்பட சுமார் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருவியப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் சேதுராமன். இவர் அக்கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் நிர்வாக தலைவராக உள்ளார். அதனால் கோயில் நகைகளை தனது வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கோயில் நகைகள் மற்றும் அவருடைய வீட்டில் இருந்த சுமார் 100 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக பள்ளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் அவரது வீட்டில் அருகே உள்ள மணிகண்டன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கருவியப்பட்டி கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day