ஆம்ஸ்ட்ராங் படுகொலை-தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கும் டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி தனது வீட்டின் அருகே நின்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகை செய்திகள் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த சம்பவம் ஒரு படுகொலை என்பதால் விரைந்து பதிலளிக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கும் டிஜிபிக்கும் தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day