ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் தலையில் கல்லைப் போட்டு தலை மற்றும் கை நசுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் தெற்கு போலீசார்  பெண்ணின் சடலத்தை போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த கல் உள்ளிட்ட தடயங்களை போலீசார் சேகரித்து, விசாரணையை தொடங்கினர். மேலும் ஹண்டர் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தேடிய போது பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஓடி நின்றது. கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண் தனியார் மருத்துவமனையின் செவிலியர் உடையில் இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகளில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பதும் பல்லடம் சாலையில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருப்பதும் திருப்பூர் வந்து 20 நாட்கள் ஆனதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day