ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு அமல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் ATM பரிவர்த்தனை கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ATM கார்டு மூலம் பணம் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ATM இந்திரத்தை மாதத்துக்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் ATM-ஐ பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள், கட்டணம் வசூலிக்கும். அதன்படி இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்த பிறகு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் 23 ரூபாயாக உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 முறையும், மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளும் செய்யலாம். இது தவிர, வங்கி கணக்கில் பண இருப்பை தெரிந்து கொள்ள முன்பு 6 ரூபாய் வசூலிக்கப்பட்டநிலையில் தற்போது அந்த கட்டணமும் 7 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Night
Day