அஜ்மீரில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்‍கி 4 பேர் உயிரிழப்பு, மயங்கி விழுந்த பலர் மீட்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அஜ்மீரில் டிஜி பஜார் பகுதியில் உள்ள நாஸ் ஹோட்டலில் இன்று காலை திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தீயில் எழுந்த கரும்புகையால் சுவாசக்‍கோளாறால் அவதிப்பட்ட பலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டனர்.
ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.  தீ விபத்துக்‍கான காரணம் குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day