நாடு முழுவதும் கோடை மழை இயல்பை விட அதிகம் பதிவாகும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோடை மழை மே மாதத்தில் இயல்பைவிட அதிகம் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் கோடை மழை இயல்பைவிட அதிகம் பதிவாகும் என்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோடை மழை மே மாதத்தில் இயல்பைவிட அதிகம் பதிவாகும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இம்மாதம் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்யும் என்றும், கடலோர மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்திர பிரதேசம் உள்பட 15 மாநிலங்களுக்‍கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது.

Night
Day