ராமர் கோயில் முதல் தளத்தில் ராமர் தர்பார் அமைக்‍கும் பணி தீவிரம் - முதல் முறையாக தங்க கதவுகள் பொருத்தும் பணி மும்முரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் முதல் தளத்தில் ராமர் தர்பார் அமைக்‍கும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. இங்கு முதல் முறையாக தங்க கதவுகள் பொருத்தப்பட உள்ளன.

அயோத்தி ராமர் கோயிலில் வருகிற 23 ஆம் தேதி முதல் ஜுன் 5 ஆம் தேதிக்‍குள் 18 சுவாமி சிலைகள் நிறுவப்படும் என்று ராமர் கோயில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார். ராமர் தர்பார் மண்டபம் வருகிற ஜுன் 6 ஆம் தேதி திறக்‍கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ராமர் தர்பார் மண்டபத்தில் 5 அடி உயர வெண் பளிங்கால் உருவாக்‍கப்பட்ட ராமர் சிலை பொருத்தப்படும் என்றும், சீதா, லட்சுமணர், பரதர், சத்ருகனன் மற்றும் அனுமன் சிலைகள் இடம்பெற உள்ளன. கோயிலை சுற்றிலும் 7 வளாகங்களில் மேற்கொள்ளும் பணிகள் நிறைவடைய உள்ளன. 

Night
Day