20 ஆண்டுகளில் முதல்முறையாக பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த சூரிய புயல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஒரு சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியுள்ளது. இதனால் செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்பு மற்றும் மின் கட்டமைப்புகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளது. அதில் CEMS எனப்படும் சூரியனில் இருந்து வெளியாகும் பிளாஸ்மா மற்றும் காந்தபுலங்கள் பூமியை தாக்கியுள்ளதாகவும், வரும் நாட்களிலும் இவை பூமியை தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய புயல் தாக்குதலில் இரவு வானத்தில் நடந்த அரோராவின் வண்ணமிகு பிரமிக்க வைக்கும் காட்சிகளை அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Night
Day