+2, 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி - மாணவச் செல்வங்களுக்கு சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச்செல்வங்களுக்‍கும், அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளவர்களுக்‍கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதயம் கனிந்த நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும்  தெரிவித்துள்ளார். தற்சமயம் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள், அதுபற்றி கவலைப்படாமல் எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, தன்னம்பிக்‍கையோடும், தைரியத்தோடும் மீண்டும் முயற்சித்து, தேர்ச்சி பெறவேண்டும் என்றும் சின்னம்மா கேட்டுக்‍ கொண்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதளப் பதிவில், 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில், தேர்ச்சி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார். 

12-ஆம் வகுப்பு பொதுதேர்வில் திருப்பூர் மாவட்டம் சேடப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி மஹாலக்ஷ்மி 600க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த தன்யஸ்ரீ 600க்கு 594 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது -

அதேபோன்று, பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மாணவி அப்சரா 600க்கு 592 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார் - மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோகிலா என்ற மாணவி, விபத்தில் சுயநினைவை இழந்த தனது தாயை பராமரித்துக் கொண்டே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி 600க்கு 573 மதிப்பெண்கள் எடுத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது - சென்னையைச் சேர்ந்த திருநங்கை மாணவி நிவேதா பல தடைகளை தகர்த்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது அறிந்து மிகவும் பெருமிதம் அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். அதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவர் வீரசிவாஜி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவச்செல்வங்கள் சிறப்பான சாதனைகளை படைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது -

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மாணவி காவிய ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது - 

அதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியைச் சேர்ந்த மாணவி காவிய ஸ்ரீயா, கிருஷ்ணகிரி மாவட்டம்  அரூரைச் சேர்ந்த சந்தியா, திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

பல தடைகளை கடந்து, விடாமுயற்சியுடன் நன்றாகப் படித்து 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்று, சாதனை படைத்துள்ள மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்தேர்வுகளில் தற்சமயம் வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், அதைப்பற்றி கவலைப்படாமல், எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, தன்னம்பிக்கையோடும், தைரியமாகவும் இருந்து மீண்டும் முயற்சித்து தேர்ச்சி பெறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

மாணவச்செல்வங்கள் தங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்ற நண்பர்களோடு அமர்ந்து பேசுங்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று பொறுமையோடு ஆராய்ந்து, விரும்பிய மேற்படிப்புகளை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றி பெற்று, உங்கள் எண்ணம்போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day