ஹார்வர்டு பல்கலைகழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேரும் அங்கீகாரத்தை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளதால் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிபர் டிரம்ப் நிர்வாகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம் மாணவர்களின் போராட்டங்களுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் வெளி நாட்டு மாணவர்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனை அளிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் தவறியதால் பல்கலைக்கழகத்துக்கு 19 ஆயிரம் கோடி நிதியை அரசு நிறுத்தி வைத்தது. இதையடுத்து அமெரிக்க எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து ஹார்வர்டில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கைக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. தற்போது பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற வேண்டும், இல்லையெனில் விசா ரத்து செய்ய நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பல்கலைக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசின் நிபந்தனைபடி, மாணவர்கள் போராடிய வீடியோ ஆதாரங்களை 72 மணி நேரத்தில் அரசிடம் சம்பிர்த்தால் இந்த நெருக்கடியில் இருந்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு மாணவர்களின் படிப்பு கேள்விக் குறியாகியுள்ளது. 

Night
Day