ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னோஹோர்கை-க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம்,  இயற்பியல், வேதியியலைத் தொடர்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி 2025ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னோஹோர்கை-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பேரழிவு பயங்கரவாதத்துக்கு மத்தியில், கலைத்திறனை உறுதிப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக அவருக்கு நோபல் பரிசு வழஙகப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Night
Day