மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை - கர்நாடகா அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை அளிக்கும் திட்டத்திற்கு கர்நாடகா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் சமயத்தில் ஒருநாள் விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பீகார், ஒடிஷா மாநிலங்களில் பெண்களின் மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Night
Day