எழுத்தின் அளவு: அ+ அ- அ
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மா என்ற தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தியாகும் கலப்பட மருந்தை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசை வன்மையாக கண்டிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமான ஸ்ரீசன் பார்மா என்ற தனியார் நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை விளம்பர திமுக அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ்வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீசன் பார்மா என்ற தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதில் மேலும் 5குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன - திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையாலும், அலட்சிய போக்கினாலும் இத்தனை குழந்தைகளின் விலைமதிப்பற்ற உயிர்களை பறிகொடுத்து இருக்கிறோம் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். இதற்கெல்லாம் திமுக தலைமையிலான அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என கேள்வி எழுப்பியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தியாகும் கலப்பட மருந்தை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனையில், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு குழந்தைகள் இறந்துள்ளதாக தெரியவருகிறது - அதாவது 'பெயின்ட், மை' போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலப்படம் செய்யப்பட்ட "கோல்ட்ரிப்" என்ற இருமல் மருந்தை பயன்படுத்தியதன் விளைவாகத்தான் குழந்தைகளின் மரணம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் மத்தியபிரதேசத்தில் 9 குழந்தைகளும், ராஜஸ்தானில் 2 குழந்தைகளும் முதன் முதலில் இறந்தபிறகுதான் சம்பந்தப்பட்ட இருமல் மருந்தை தடை செய்துள்ளதாக துறை அமைச்சர் தற்போது தெரிவிக்கிறார் - மேலும், மருந்து ஆய்வாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மருந்தின் தரத்தை ஆய்வு செய்யவில்லை என்ற உண்மையையும் துறை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
எனவே, திமுக தலைமையிலான இந்த மக்கள் விரோத ஆட்சியே முடிவுக்கு வருகின்ற நிலையில், தமிழ்நாட்டில் எந்த ஒரு வேலையும் தொடர்ந்து உருப்படியாக நடைபெறவில்லை என்பதும், தமிழக மக்களுக்கும் திமுக தலைமையிலான அரசால் எந்த ஒரு பயனும் இல்லை என்பதும் நிரூபணம் ஆகிவிட்டது - தமிழகம், புதுச்சேரி, ஒடிஷா உள்ளிட்ட பல மாநிலங்களில் இதே இருமல் மருந்தை தான் குழந்தைகளுக்கு பயன்படுத்தி இருப்பதாக தெரிய வருகிறது - இதன் மூலம் நாடு முழுவதும் எத்தனை குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்படைந்துள்ளது என்பதை விரைந்து கண்டறியவேண்டும் என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கலப்பட இருமல் மருந்து பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது - குழந்தைகளின் உயிரை பறிக்கும் இந்த கலப்பட மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றையெல்லாம் முற்றிலும் பறிமுதல் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறைதான் தமிழகத்தில் செயல்படும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி வசதிகளை ஆய்வுக்குட்படுத்தி, அவை தர நிர்ணயங்களுக்கு உட்பட்டு செயல்படுவதை உறுதி செய்திட வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். மேலும், போலியான மருந்துகள், கலப்பட மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகள் தயாரிப்பதைத் தடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பும் தமிழக அரசுக்குதான் உள்ளது - ஆனால், ஸ்ரீசன் பார்மா போன்ற தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் கலப்பட மருந்துகளை திமுக தலைமையிலான அரசு ஏன் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தவில்லை? அல்லது தனியார் நிறுவனத்தின் தவறுகள் தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்களிடம் எழுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, திமுக தலைமையிலான அரசு, கள்ளம் கபடமற்ற 22 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிற ஸ்ரீசன் பார்மா என்ற தனியார் நிறுவனத்தின் மருந்து உற்பத்தி உரிமத்தை உடனே நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்நிறுவனத்தை உடனே மூடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும், மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிலும் முறையான ஆய்வுகளை தொடர்ந்து செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமையிலான அரசு தயங்கக்கூடாது என்பதை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். ஆனால், திமுக தலைமையிலான ஆட்சி இருக்கும்வரை மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சிமாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.