உலகம்
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது - இந்தியா, பாகிஸ்தானிடம் கூறியதால் இருநாடுகளும் போர் நிறுத்தம் - டிரம்ப்...
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா என லண்டன் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த 52 வயதான பத்திரிகையாளர் ஜுலியன் அசாஞ்சே, 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இதனிடையே 2019-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அசாஞ்சோவை லண்டன் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ராணுவ ரகசியங்களை திருடியது உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அசாஞ்சேவை நாடுகடத்த அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் உயர்நீதிமன்றம், அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமைகளை அசாஞ்சேவுக்கும் வழங்க வேண்டும் எனவும், இது குறித்து 3 வாரங்களுக்குள் அமெரிக்க அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் ?...