மாலத்தீவு : சீன உளவு கப்பல் அனுமதி, தவறான வெளியுறவுக்‍கொள்கை - எதிர்க்கட்சிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீன உளவு கப்பலை ஆய்வுக்‍காக அனுமதிப்பதும், தவறான வெளியுறவுக்‍கொள்கையை கடைபிடிப்பதும் மாலத்தீவு  நாட்டுக்‍கு மிகவும் தீங்கு விளைவிக்‍கும் என்று அந்நாட்டு எ​திர்க்‍கட்சிகள் எச்சரித்துள்ளன.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 87 இடங்களில் 55 உறுப்பினர்களை கொண்ட ஜனநாயக கட்சி மாலத்தீவு  ஜனநாயக கட்சி ஆகியவை வெளியிட்ட அறிக்‍கையில் , அதிபர் முகமது மிகவும் தவறான , வெளிப்படை தன்மை அற்ற வெளியுறவுக்‍கொள்கையை கடைபிடிப்பதாகவும், இதனால் நீண்ட கால நாட்டு நலன்கள் பாதிக்‍கப்படும் என்றும் தெரிவித்துள்ளன. மாலத்தீவு புதிய அதிபராக முகமது மியுசு பதவியேற்றபிறகு இந்தியாவுக்‍கு எதிராகவும், சீனாவுக்‍கு ஆதரவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day