மாலத்தீவிருந்து இந்திய ராணுவப் படையின் 2-வது குழு வெளியேறும் - மாலத்தீவு அதிபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படையின் 2-வது குழு இந்த மாதத்துக்குள் வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக 2 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், ஒரு டார்னியர் விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தியாவுக்‍கு எதிரான மோதல் போக்‍கை கடைபிடித்து வரும் மாலத்தீவு அதிபர் மூயிஸ், அங்குள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வருகிற மே 10-ம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் முற்றிலும் திரும்ப பெறப்படுவார்கள் என்று மாலத்தீவு வெளியுறவு துறை தெரிவித்தது. 

Night
Day