மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த போப் பிரான்சிஸ் உடல் வாடிகனில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கின்  இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஒரு வார காலத்துக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி 266-வது போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். வழக்கமாக போப் பிரான்சிஸின் அரண்மனையான அப்போஸ்டோலிக்கில் உடல் வைக்கப்பட்டு, பின்னர் புனித பீட்டர் பசிலிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2023ஆம் ஆண்டே ஆடம்பரங்களை தவிர்த்து தனது விருப்பப்படி இறுதிச்சடங்கை எளிமையாக நடத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியிருந்தார். மேலும், அவரது உடலை நேரடியாக புனித பீட்டர் பசிலிக்காவுக்கு கொண்டு சென்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும் என்றும், பின்னர் வழக்கமாக அடக்கம் செய்யும் போப் கல்லறைகளுக்கு பதிலாக இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித சான்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.

மறைந்த முந்தைய போப்கள் சைப்ரஸ், ஈயம் மற்றும் ஓக் மரத்தால் செய்யப்பட்ட மூன்று அடுக்கு சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டனர். ஆனால் போப் பிரான்சிஸ், தனது உடலை துத்தநாகம் பூசப்பட்ட எளிய மர சவப்பெட்டிக்குள் மட்டும் வைக்க வேண்டும் என்றும் கூறிவிட்டார்.

அதன்படி வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. வாடிகனுக்கு வெளியே நல்லடக்கம் செய்யப்படும் முதல் போப் இவர்தான்.

போப் இறுதி சடங்கு, கார்டினல்கள் கல்லூரியின் டீன் கார்டினல் ஜியோவன்னி பட்டிஸ்டா ரே தலைமையில் நடத்தப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கத்துக்கு பிறகே புதிய போப் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day