நாடு கடத்தல் தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு அடைக்கலம் தேடி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி உரிய ஆவணங்கள் இன்றி வருவோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் திட்டத்தை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022ம் ஆண்டு தாக்கல் செய்தார். பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த திட்டத்தை முன்னெடுத்த தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

Night
Day