சீனாவில் கனமழை - ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தெற்கு சீனாவில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதில் குவாங்டாங் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மழையின் தீவிரம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Night
Day