துபாய் : வரலாறு காணாத மழையால் வெருவெள்ளம் - மெட்ரோ ரயில் நிலையங்களை சூழ்ந்த மழைநீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாய் விமான நிலையத்தில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால் விமான சேவையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 துபாயில் வரலாறு காணாத பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அபுதாபி மற்றும் துபாயில், பல பகுதிகளில் மின்சாரம், தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஓமனில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல இடங்களில் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

Night
Day