தாய்லாந்து-கம்போடியோ தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாய்லாந்து, கம்போடியா இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இரு நாட்டு தலைவர்களும் இன்று மலேஷியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் எல்லை பிரச்னை கடந்த 24ம் தேதி மோதலாக வெடித்தது. இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாட்டு தலைவர்களிடமும் சண்டையை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு கம்போடியா சம்மதம் தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின், மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இரு நாட்டு தலைவர்களையும் அமைதி பேச்சு நடத்த அழைப்பு விடுத்தார். அதை ஏற்று தாய்லாந்து பொறுப்பு பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் மற்றும் கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் இருவரும் இன்று மலேஷியாவில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

Night
Day