டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு - அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்தப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், இதுபோன்ற சம்பவத்திற்கு அமெரிக்காவில் இனி இடம் இல்லை என்றும், இந்த சம்பவத்திற்கு எதிராக ஒரே தேசமாக நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை என்றும், முன்னாள் அதிபர் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பதில் நாம் அனைவரும் நிம்மதி அடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

varient
Night
Day