சூடான் - துணை ராணுவம் நடத்திய தாக்குலில் 100 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சூடான் நாட்டின் கெசிரா மாநிலம் அருகே துணை ராணுவ ஆதரவு படை நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடான் நாட்டின் ராணுவப் படையினருக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் விவசாய மாநிலமான கெசிரா மாநிலத்தின் வாட் அல் நூரா கிராமத்தில் துணை ராணுவ ஆயுதப்படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிறுவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் குறித்து தகவலளித்தும் சூடான் ராணுவத்தினர் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

varient
Night
Day