உலகம்
பஹல்காம் தாக்குதல் - SCO மாநாட்டில் கண்டனம்
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
கென்யா நாட்டின் அணைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேறுமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சமீப நாட்களாக கென்யா மற்றும் தான்சானியா நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி கென்யாவில் 188 பேரும், தான்சானியாவில் 155 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமான 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொன்யா நாட்டில் உள்ள 178 அணைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறும், தண்ணீர் முழுவதும் நிரம்பியுள்ளதால் அணைகள் சரிவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் கனமழையின் தாக்கம் இன்னும் சில நாட்கள் இருக்குமென்றும் சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
கழகத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம...