பிரேசிலில் கனமழையால் அணை இடிந்து விழுந்து விபத்து - 30 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக அணை ஒன்று இடிந்து விழுந்து 30 பேர் பலியாகியுள்ளனர். தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தெற்கு பிரேசிலில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதில் ரியோ கிராண்டே மாநிலத்தில் உள்ள அணை ஒன்று இடிந்து விழுந்ததில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும், 60 நபர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 15 ஆயிரம் பேர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவு மற்றும் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெள்ளத்தால் நாடு மிதந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அணை ஒன்று இடிந்து விழுந்துள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். 

Night
Day