கஜகஸ்தான் விமான விபத்து - மன்னிப்பு கோரினார் ரஷ்ய அதிபர் புதின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


அஜர்பைஜான் நாட்டு பயணிகள் விமானம் கஜகஸ்தான் மீது பறந்தபோது, விழுந்து நொறுங்கியது. அதில் சென்ற பயணிகளில் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். விமானம் விழுந்து நொறுங்கியதற்கு, ரஷ்ய ஏவுகணை தாக்குதலே காரணம் என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் சந்தேகம் கிளப்பின. இதை முதலில் மறுத்த ரஷ்யா, பின்னர் ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதே காரணம் என்று கண்டறியப்பட்டதால் பின்னர் ஏற்றுக்‍கொண்டது.

இந்நிலையில் விமானம் தாக்கப்பட்டதற்கு, ரஷ்ய அதிபர் புதின் அஜர்பைஜான் அதிபரிடம் தொலைபேசியில் பேசி மன்னிப்பு கோரினார். . நடந்த துயர சம்பவம் என்று புதின் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் விமான விபத்துக்கு முழுமையான பொறுப்பை ரஷ்யா ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day