எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியர் உள்பட 2 பேர் மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறிய இந்தியர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் உள்பட இருவர் ஆக்‍சிஜன் பற்றாக்‍குறையால் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் நேபாள அரசு ஈடுபட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுப்ரதா கோஷ் என்பவர் நேபாள மலையேற்ற நிறுவன உதவியுடன் 
2 நாட்களுக்‍கு முன் வெற்றிகரமாக எவரெஸ்ட் உச்சியான 29 ஆயிரத்து 32 அடியை எட்டி சாதனை படைத்தார். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது ஆக்‍சிஜன் பற்றாக்‍குறையால் உயிரிழந்தார். 
இதனிடையே, எவரெஸ்ட் உச்சியை அடைய முயன்ற பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பிலிப் சான்டியாகோ,  என்பவரும் கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இவர் 26 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தெற்கு கோல் என்ற முகாமை அடைந்தபோது, களைப்பாக உணர்ந்து கூடாரத்திற்கு ஓய்வு எடுக்கச் சென்றபோது உயிரிழந்தார்.

varient
Night
Day