இஸ்ரேலுக்கு THAAD எனப்படும் மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் வலுத்து வரும் நிலையில், THAAD எனப்படும் Terminal High-Altitude Area Defence என்ற மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானில் இருந்து சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் விரோதப் போக்கைத் தொடர்ந்து இஸ்ரேலின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை இயக்க சுமார் 100 அமெரிக்க துருப்புக்களும் இஸ்ரேல் செல்வதாக கூறியுள்ளது. ஏப்ரல் 13, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Night
Day