அமெரிக்கா - டேங்கர் லாரி வெடித்து பாலம் சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்‍காவின் ​கனெக்‍டிகட் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து காரணமாக நியூ இங்கிலாந்து மற்றும் நியூயார்க்‍ இடையிலான சாலை காலவரையின்றி மூடப்பட்டது. 

கனெக்‍டிகட் மாகாணம் நார்வாக்‍ பகுதியில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று முன்னால் சென்ற கார் மற்றும் ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது திடீரென மூன்று வாகனங்களும் மோதிக்‍கொண்டன. இதில் பெட்ரோல் டேங்கர் லாரி பற்றி எரிந்தது. இதனால் பாலம் ஒன்று சேதமடைந்தது. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து க​னெக்‍டிகட் மாகாண ஆளுநர் அப்பகுதியில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்துள்ளார். நாள்தோறும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாகனங்கள் சென்று வரும் நியூ இங்கிலாந்து மற்றும் நியூயார்க்‍ இடையிலான முக்‍கிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

Night
Day