"இந்தியா - பாக்., மோதல் முடிவுக்கு வரவேண்டும்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவும்-பாகிஸ்தானும் இணைந்து பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த தாக்குதல் பயங்கரமானது என்று கூறினார். இரு நாடுகளையும் தான் நன்றாக அறிவதாகவும் தனக்கு இருநாடுகளுடனும் நல்ல உறவு இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போதைய பதற்றத்திற்கு இரு நாடுகளும் இணைந்து  தீர்வு காண விரும்புவதாகக் கூறிய டிரம்ப், அதற்கு தன்னால் எந்த வகையிலாவது உதவி செய்ய முடியும் என்றால் அவ்வாறு உதவி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Night
Day