ஆபரேஷன் சிந்தூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் 259 இடங்களில் நேற்று  போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாசாலை, ஈவேரா பெரியார் சாலை,காமராஜர் சாலை,வணிக வளாகங்கள், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் கூடாரங்கள் அமைத்து தீவிர வாகன சோதனை மற்றும் சந்தேக நபர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Night
Day