"இந்தியா ஒருதலைப்பட்சமாக இருக்கிறது"- அமெரிக்க அதிபர் டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம் ஆனால், அது பல ஆண்டுகளாக ஒருதலைபட்சமாக இருக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தநிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்காக பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். அங்கு அவரும், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் சிரித்து பேசியபடி காணப்பட்டனர். 3 பேருக்கிடையே நிலவிய நெருக்கம், அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இந்தியா மீதான வரிகளை மறுபரிசீலனை செய்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், பல ஆண்டுகளாக, அது ஒருதலைப்பட்ச  இருக்கிறது என தெரிவித்தார். மேலும், நாங்கள் இந்தியாவுடன் வியாபாரம் செய்யவில்லை.. அவர்கள் தான் எங்களுடன் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறினார். 

varient
Night
Day