NDA நாடாளுமன்ற கூட்டம் - பிரதமருக்கு பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் குழு கூட்டம் நிறைவடைந்தது. டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. அன்று முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகக் கட்டிடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜேபிநட்டா மற்றும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.  

இக்கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர்,  தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்கா அறிவித்தது, பஹல்காம் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Night
Day