இந்தியா
20 ஆண்டுகளுக்கு பிறகு மொழியால் இணைந்த சகோதரர்கள்
மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோ?...
நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் முனைப்பில் பாஜக நகர்ந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் பேட்டியளித்த அமித்ஷா, இரண்டு கட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 100 இடங்களை கைப்பற்றி விட்டதாகவும், தென்னிந்தியாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ தொடர்பாக, கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அமித்ஷா, காங்கிரஸ் கட்சி தன்னை போன்ற பாஜக மூத்த தலைவர்களின் போலி காணொளிகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோ?...
இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் ?...