3 மத்திய அமைப்புகளுக்கு புதிய தலைமை இயக்குநர்கள் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த் டேட் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள என்ஐஏ இயக்குநர் சதானந்த் வசந்த் டேட்டும், ராஜீவ் குமாரும் ஒரே காலகட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வாகி, பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த நியமனங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

varient
Night
Day