2வது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று ஓய்ந்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் 2ம் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. 2வது கட்டமாக, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறுவதால் அங்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Night
Day