பரம்பரை சொத்து வரி தொடர்பான பிரதமரின் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பரம்பரை சொத்து வரி தொடர்பாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் பிரச்சாரம் தற்போது விஷத்தால் நிறைந்திருப்பதாக சாடினார். அவரது பேச்சு, கொந்தளிப்புடன் அவர் இருப்பதைக் காட்டுவதாகவும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கில், அவநம்பிக்கையுடனும், திட்டமிட்ட ரீதியிலும் பிரதமர் மோடி இப்படிப் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார். சாம் பிட்ரோடா பேசிய பரம்பரை சொத்து வரி போல் எந்த ஒரு திட்டமும் எனக் கூறிய ஜெய்ராம் ரமேஷ், எஸ்டேட் வரியை 1985-ல் ரத்து செய்தவரே பிரதமர் ராஜீவ் காந்திதான் எனத் தெரிவித்தார்.

varient
Night
Day