விமானத்தின் DVR கண்டுபிடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை குஜராத் விமான போக்குவரத்து சேவை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், விமான அமைப்புகள் ஆய்வகத்தினர் இங்கு விரைவில் வர உள்ளதாகவும் அவர்களிடம் இந்த டிஜிடல் வீடியோ ரெக்கார்டர் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தனர். விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரானது ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இருந்து வீடியோவை பதிவு செய்து சேமிக்த்து வைக்கும். விமான விபத்து ஏற்பட்டால், அந்த வீடியோக்களை வைத்து விபத்துக்கான காரணங்களை அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day