விடைபெறுகிறது மிக்-21 போர் விமானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருந்த மிக்-21 போர் விமானம் இன்றுடன் விடைபெறுகிறது. 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெறும் விழாவில் விமானப்படையின் 23வது படை பிரிவை சேர்ந்த கடைசி மிக்-21 போர் விமானத்துக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்ச ராஜ்நாத் சிங், முப்படைகளில் தலைமை தளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நிகழ்வில், விமானப்படை தலைமை தளபதி அமர்பிரீத் சிங் கடைசி மிக்-21 போர் விமானத்தை இயக்கிவுள்ளார். 1963ம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்ட மிக்-21 போர் விமானம், 1965 மற்றும் 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போர்கள், கார்கில் போர், பாலாகோட் தாக்குதல் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day