தமிழகத்தின் புதிய டிஜிபி இன்று தேர்வு - டெல்லியில் உயர்நிலை குழு கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் புதிய டிஜிபி-யை தேர்வு செய்வதற்கான உயர்நிலை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த பொறுப்பில் இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். மாநில காவல்துறை டிஜிபி நியமன நடைமுறையில், யுபிஎஸ்சி தேர்வுக் குழு மூலம் டிஜிபி-யை நியமிக்கும் வழக்கத்தை தமிழகம் பின்பற்றி வருகிறது. அதன்படி டெல்லியில் யுபிஎஸ்சி தேர்வாணைய தலைவர் அலுவலலக அரங்கில் இதற்கான கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் டிஜிபி நிலையிலான மூன்று உயரதிகாரிகள் பட்டியலை இறுதி செய்யப்பட்டு மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அதில் ஒருவர் புதிய டிஜிபி-யாக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day