அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சீனாவின் "டிக்டாக் செயலி"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவை சேர்ந்த வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்-கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் நிர்வகித்து வரும் இந்த செயலிக்கு ஜோ பைடன் அதிபராக இருந்த போது தடை விதிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதிபரான பின்னர் தடையை தற்காலிகமாக நீக்கிய டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயல்பட வேண்டும் என்றால், அதனை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் அல்லது கணிசமான பங்கை அமெரிக்க நிறுவனத்திற்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக சீன அதிபருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், டிக்டாக்-கை அங்கீகரிக்கும் நிர்வாக ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார். அமெரிக்கா கட்டுப்பாட்டில் வரும் டிக்டாக்கிற்கான கொள்கையும், விதிகளும் உருவாக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார். 

Night
Day